வாழ்க்கை பயணம்

வாழ்க்கை என்ற ஒன்றில்
பிறப்பு முதல் இறப்பு வரை 
அனைவருக்கும் பயணம் ஒன்றே
ஆனால் அவரவர் தேர்ந்து எடுக்கும் 
பாதை வேறு . . . .  . .
வளைந்து செல்லும் பாதைகளில் 
திரும்பி செல்ல தெரிந்துகொள்ள வேண்டும் 
இல்லையெனில் வீழ்வது நாம் தான் 
பாதை அல்ல . . .. . .. .  .
உடன் வருபவர் உனக்காக வரவில்லை 
ஊருக்காக வருகிறார். . . . .
உனக்கு தேவையான உணர்விற்காக இல்லை
அவருக்கு தேவையான  உதவிக்காக வருகிறார்  . . . 
புரிந்துக்கொள் நீ அவருக்கு தேவை இல்லை
அவர் தான் உனக்கு தேவை படுகிறார் 
இந்த பூமிக்கு நீ துணை தேட வந்தாயா
அல்ல துணையாக இருக்க வந்தாயா
அறிந்துக்கொள்   நீயே உன் வாழக்கை என்னும் 
பயணத்தின் ஒரே மற்றும் உண்மையான துணை . . .
கண்ணீர் துடைக்க கைகள் இருந்தால் . . .  .
நன்றி சொல் ஏனென்றால்  நீ கொடுத்து வைத்து இருக்கிறாய் . 
உண்மையாக உடன் ஒருவர் இருந்தால்-அவரை
நீ உயிராக எண்ணாதே ஏனென்றால்
உயிரென்றால் என்றோ ஒரு நாள் பிரிந்து விடும் . . . . . 

#poem#life#selflove

Comments

Profile image

Uilleam Ó Ceallaigh

Sat 25th Mar 2023 14:10

I would, if I could, but I can't!😊

If you wish to post a comment you must login.

This site uses cookies. By continuing to browse, you are agreeing to our use of cookies.

Find out more Hide this message